சோபகிருது ஆண்டு – கார்த்திகை 7 – வியாழக்கிழமை (23.11.2023)
நட்சத்திரம் : உத்திரட்டாதி மாலை 5.35 வரை பின்னர் ரேவதி
திதி : ஏகாதசி மாலை 8.47 வரை பின்னர் துவாதசி
யோகம் : சித்த யோகம்
நல்லநேரம் : காலை : 10.30 – 11.30
வியாழக்கிழமை – சுப ஓரை விவரங்கள்
(காலை 9 முதல் 10.30 வரை, பகல் 1 முதல் 1.30 வரை, 4.30 முதல் 6 வரை, இரவு 6 முதல் 7 வரை, 8 முதல் 9 வரை)
மேஷம் :குடும்பத்தில் முக்கிய வேலைகள் முடிவடையும். யாருக்கும் வாக்குறுதியும் தர வேண்டாம். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
ரிஷபம் :எல்லாரிடமும் அனுசரணையாக நடந்துகொள்ளவும். நண்பர்களிடம் விட்டுக்கொடுத்து போகவும். திருமண காரியம் கைகூடும். உத்தியோக மாற்றம் ஏற்படும்.
மிதுனம் :குடும்பத்தில் ஆதரவு பெருகும். எதிர்ப்புகள் தானாக நீங்கும். உறவினர்கள் சிலர் உறுதுணையாக இருப்பர் .தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
கடகம் :சொந்த பந்தங்கள் தேடி வருவர். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். சூழ்நிலைகள் சாதகமாக மாறும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
சிம்மம் :உங்கள் திறமைக்குத் தகுந்த வெகுமதி கிடைக்கும். தெய்வ காரியங்களுக்காக பணம் செலவாகும். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். உத்யோகத்தில் வேலை பளு குறையும்.
கன்னி :சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். காணாமல் போன பொருள் திரும்ப கிடைக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
துலாம் :குடும்ப பாரம் கூடும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். பல நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
விருச்சிகம் :மற்றவர்களிடம் தன்மையுடன் பேசுவது நல்லது. பல ஆசையில் ஒன்று நிறைவேறும். திட்டமிடாத செலவுகள் வரும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.
தனுசு :குடும்பத்தாரின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கவும். திட்டமிட்டு செய்யும் காரியம் வெற்றி பெரும். சேமிக்கும் எண்ணம் மேலோங்கும். தொழில், வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும்.
மகரம் :குடும்பத்தின் மேல் அதிக அக்கறைகொள்ளவும். தியானம் மனநிம்மதியை தரும். காரிய தடை விலகும். உத்யோகத்தில் உங்கள கை ஓங்கும்.
கும்பம் :பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.
மீனம் :இழுபறியாக இருந்த காரியங்கள் சீக்கிரத்தில் முடியும். நெருங்கிய சொந்தங்களின் உதவி கிடைக்கும். திருமண தடை நீங்கும். தொழில், வியாபாரம் சிறக்கும்.