சோபகிருது ஆண்டு – ஐப்பசி 29 – புதன்கிழமை (15.11.2023)
நடசத்திரம் :கேட்டை காலை 4.31 வரை பின்னர் மூலம்
திதி : துவிதியை மாலை 2.40 வரை பின்னர் திரிதியை
யோகம் : சித்த மரண யோகம்
நல்ல நேரம் : காலை 9.00-10.00/ மாலை 4.45-5.45
புதன்கிழமை சுப ஓரை விவரங்கள் (காலை 9 முதல் 10 வரை, பகல் 1.30-3.00 வரை 4 முதல் 5 வரை, இரவு 9 முதல் 10 வரை )
சுபகாரியங்கள் : கலை பயில, புது கணக்கு எழுத, பொன் வாங்க
மேஷம் : சொந்தங்களால் வந்த வருத்தங்கள் அகலும். நட்பால் நன்மை வந்து சேரும். கணவன் மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். தொழில் வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
ரிஷபம் : குடும்ப செல்வாக்கு உயரும். உறவினர்கள் பக்கபலமாக இருப்பர். பயணங்களால் உடல் அலைச்சல் ஏற்படும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
மிதுனம் : குடும்பம் சீராக நடைபெறும். மிக முக்கிய நபர்களின் சந்திப்பு நிகழும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
கடகம் : குடும்ப உறவுகளில் சண்டை சச்சரவுகள் வந்து போகும். சிக்கனமாக வாழ பழகிக்கொள்ளவும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
சிம்மம் : அடுத்தவர்களிடம் உதவி கேட்க தயக்கம் ஏற்படும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். தொழிலில் ஏற்றம் இறக்கம் காணப்படும்.
கன்னி : உங்களால் மற்றவர்கள் பயன்பெறுவர். கடந்த சில தினங்களாக இருந்து வந்த மனசங்கடம் தீரும். உடல் பலம் பெரும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.
துலாம் : குடும்பத்தில் சிறு சிறு சலனங்கள் ஏற்பட்டு மறையும். மன வலிமை கூடும். ஆதாயமில்லாத செயல்களால் அலைச்சல் ஏற்படும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
விருச்சிகம் : குடும்ப நபர்கள் நேசக்கரம் நீட்டுவர். எதையும் ஆராய்ந்து பார்க்கும் திறன் இருக்கும். அனாவசிய செலவுகளை குறைக்கவும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
தனுசு : குடும்பத்தாருடன் சுமுக உறவு ஏற்படும். அடுத்தவர்களின் பேச்சுக்கு செவி சாய்க்க வேண்டாம். கடன் பிரச்சனை குறையும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
மகரம் : செய்யும் காரியத்தில் நிதானமும், செயலில் விவேகமும் தேவை. வாகன பராமரிப்பு செலவு கூடும். எதிர்ப்புகள் தானாக அடங்கும். உத்யோத்தில் ஆதரவு பெருகும்.
கும்பம் : பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். பயணங்களால் அசதி ஏற்படும். உறவினரிடம் இருந்து அனுகூலமான தகவல் வரும். தொழில், வியாபாரத்தில் சில இடையூறுகள் இருக்கும்.
மீனம் : குடும்ப நலனில் அக்கறைகொள்ளவும். உடல் ஆரோக்கியம் பலம் பெரும். கோர்ட் வழக்கில் இழுபறி நிலை நீடிக்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.