சோபகிருது ஆண்டு -கார்த்திகை 27-புதன்கிழமை (13.12.2023)
நட்சத்திரம் : கேட்டை மாலை 12.18 வரை பின்னர் மூலம்
திதி : பிரதமை காலை 4.35 வரை பின்னர் துவிதியை
யோகம் : சித்த – மரண யோகம்
நல்ல நேரம் : காலை 9.15-10.15/ மாலை 4.45-5.45
புதன்கிழமை சுப ஓரை விவரங்கள் (காலை 9 முதல் 10 வரை, பகல் 1.30-3.00 வரை,4 முதல் 5 வரை, இரவு 9 முதல் 10 வரை )
சுபகாரியங்கள் : கலை பயில, புது கணக்கு எழுத, பொன் வாங்க சிறந்த நாள்.
மேஷம் : கடுமையான வேலையால் மனச்சோர்வு ஏற்படும். பண பிரச்சனையால் மன சங்கடம் வரும். பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
ரிஷபம் : நல்ல காரியங்களை தாமதிக்காமல் செய்யவும். மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படக்கூடும். பெற்றோர்கள் ஆதரித்து பேசுவர். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
மிதுனம் : மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். அடுத்தவர் கருத்துக்கு செவி சாய்க்க வேண்டாம். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
கடகம் : குடும்ப விருப்பங்களை நிறைவேற்ற முடியும். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து, கௌரவம் உயரும். கடன் தொந்தரவு இருக்கும். புதுத் தொழில் யோகம் அமையும்.
சிம்மம் : யாருக்கும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். எதிர்பார்த்த நல்ல செய்தி விரைவில் வரும். கணவன் மனைவிக்கிடையே பனிப்போர் ஏற்படும். உத்யோகத்தில் கவனம் தேவை.
கன்னி : குடும்பத்தை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.
துலாம் : குடும்பத்திற்கு தேவையானது கிடைக்கும். பிராத்தனைகள் நிறைவேறும். உறவினர்களால் அனுகூலம் உண்டு. உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
விருச்சிகம் : குடும்ப நபர்களின் ஆலோசனை கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் உண்டாகும். தடைப்பட்ட உறவு மீண்டும் துளிர்க்கும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
தனுசு : குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். குடியிருக்கும் விட்டை மாற்ற வேண்டிவரும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடக்கும்.
மகரம் : உணவு உட்கொள்வதில் நேரம் ஒதுக்கவும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். பொருள் சேர்க்கை உண்டாகும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.
கும்பம் : தெய்வீக சிந்தனைகள் அதிகமாகும். உறவினர்களிடம் கேட்ட உதவி கிடைக்கும். பயணங்களால் அலைச்சல் உண்டு. உத்யோகத்தில் சகஜ நிலை காணப்படும்.
மீனம் : குடும்ப வாழ்க்கை சீரான முறையில் இருக்கும். கடின முயற்சிகள் கூட சாதாரண முடிவுகளை தரலாம். சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடக்கும்.