சோபகிருது ஆண்டு – கார்த்திகை 15 – வெள்ளிக்கிழமை (01.12.2023)
நட்சத்திரம் : புனர்பூசம் மாலை 6.17 வரை பின்னர் பூசம்
திதி : சதுர்த்தி மாலை 4.40 வரை பின்னர் பஞ்சமி
யோகம் : சித்த – மரண யோகம்
நல்லநேரம் : காலை : 9.15 – 10.15 / மாலை 4.45 – 5.45
வெள்ளிக்கிழமை சுப ஓரை விவரங்கள்
காலை 6 முதல் 9 வரை, பகல் 1 முதல் 1.30 வரை, 5 முதல் 6 வரை, இரவு 8 முதல் 9 வரை, 10.30 முதல் 11 வரை
சுபகாரியங்கள் : ஆபரணம் அணிய, தொழில் ஆரம்பம் செய்ய, சுபம் பேச சிறந்த நாள்
மேஷம் :புது முயற்சிகள் நாளடைவில் கைகூடும். நண்பர்களால் சில செலவுகள் வரும். பெற்றோரின் நன்மதிப்பை பெற முடியும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
ரிஷபம் :முக்கிய வேலைகள் தாமதமின்றி நிறைவேறும். நெருங்கிய உறவினர்களின் அன்பு தொல்லை இருக்கும். பயணங்களால் உடல் அசதி ஏற்படும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
மிதுனம் :குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். முன் கோபத்தை குறைக்கவும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
கடகம் :குடும்ப ஆதரவு பெருகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் வரும். யாரிடமும் உணர்ச்சி வசப்பட்டு பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் கவனம் செலுத்தவும்.
சிம்மம் :விலகி நின்ற நபர்கள் மீண்டும் வந்து இணைவர். பணவரவு தாமதமாகும். கணவன் மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
கன்னி :குடும்ப பாரம் குறையும். வெளி உணவுகளை அறவே தவிர்க்கவும். யாரையும் சார்ந்து இருக்க வேண்டாம். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
துலாம் :மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். திருமண பேச்சு வார்த்தை தொடங்கும். வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டு. தொழில், வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும்.
விருச்சிகம் :குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வீட்டில் புது பொருள் சேர்க்கை உண்டாகும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
தனுசு :தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். பழைய பிரச்சனையில் ஒன்று தீரும். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
மகரம் :குடும்பத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். வெளிவட்டாரத்தில் மற்றவர்களால் மதிப்பு உயரும். எதிர்ப்புகள் அடங்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
கும்பம் :நீண்ட தூர பயணங்களை தவிர்க்கவும். எதையும் தைரியமாக பேசுவது நல்லது. வாகன வசதிகள் பெருகும். உத்யோகத்தில் மனநிறைவு ஏற்படும்.
மீனம் :பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பண விஷயத்தில் ஏற்பட்ட சிக்கல் தீரும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.