குரோதி ஆண்டு – சித்திரை 1 – ஞாயிற்றுக்கிழமை (14.04.2024)
நட்சத்திரம் : திருவாதிரை காலை 5.55 வரை பின்னர் புனர்பூசம்
திதி : சஷ்டி மாலை 4.47 வரை பின்னர் ஸப்தமி
யோகம் : சித்த யோகம்
நல்லநேரம் : காலை 7.30 – 8.30 / மாலை 3.45 – 4.30
ஞாயிற்றுக்கிழமை சுப ஓரை விவரங்கள் (காலை 7.30 முதல் 10.00 வரை, பகல் 2 முதல் 4.30 வரை, இரவு 9 முதல் 12 வரை)
சுபகாரியங்கள் : மருந்து உண்ண, பேட்டி காண, யாத்திரை செய்ய சிறந்த நாள்
மேஷம் : பிரியமானவர்களிடம் அனுசரித்து போகவும். முடியாத வேலைகளை செய்ய வேண்டாம். காரிய தடை விலகும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும்.
ரிஷபம் : குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். வரவு, செலவு கணக்கில் கவனமாக இருக்கவும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.
மிதுனம் : மனக் கவலை அகலும். சாதுர்யமான பேச்சு காரிய வெற்றிக்கு உதவும். கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை நீங்கும். உத்யோகத்தில் அலைச்சல் ஏற்படும்.
கடகம் : தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். நண்பர்கள் நல்ல ஒத்துழைப்பு தருவர். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.
சிம்மம் : குடும்பத்தில் மனநிம்மதி ஏற்படும். புதிய கோணத்தில் சிந்தித்து செயல்பட முடியும். உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
கன்னி : சுற்றத்தாரின் ஆதரவு பெருகும். உறவினர்களுடன் சுமுக உறவு ஏற்படும். திருமண காரியம் கைகூடும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
துலாம் : திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். வீண் சண்டை, சச்சரவுகளை தவிர்க்கவும். மருத்துவ செலவுகள் வரும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
விருச்சிகம் : புதிய முயற்சிகளில் ஈடுபாடு உண்டாகும். வெளியில் சாப்பிடுவதை தவிர்க்கவும். நல்லதையும் கெட்டதையும் சமமாக பாவித்துக்கொள்ளவும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
தனுசு : கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். அடிக்கடி மறதி தொல்லை வரும். நல்ல தகவல் வந்து காதில் விழும். தொழில், வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும்.
மகரம் : குடும்பத்தில் சுக சௌக்கியம் உண்டாகும். பிரியமானவர்களின் நேசத்தைப் பெற முடியும். கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
கும்பம் : குடும்பத்தில் குழப்பான சூழல் காணப்படும். உடல் சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். பயணங்கள் அனுகூலமான திருப்பங்களை தரும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
மீனம் : பொது காரியங்களில் ஈடுபாடு வரும். மனதில் ஏற்பட்ட குழப்ப நிலை நீங்கும். வாகன பயணங்களில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் சிறக்கும்.