கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்று இன்றைய தினம் (01.03.2023) நடைபெறவுள்ளது.
இன்றைய தினம் பிற்பகல் 1.30 மணியளவில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்குபற்றுமாறு அனைத்து கட்சிகளினதும் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் நாடாளுமன்ற அமர்வுகளை நடாத்துதல், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளது.
கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு நிதி அமைச்சின் செயலாளரை அழைத்து வருமாறு சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனவிடம் கோரியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.