தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கைவிடப்பட்ட சீதாவாக்கை ஒடிசி தொடருந்து இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக மேல் மாகாண சுற்றுலா சபை இதனைத் தெரிவித்துள்ளது.
இதன்படி சீதாவாக்கை ஒடிசி சுற்றுலா தொடருந்து, விடுமுறை நாட்களில் வழமை போன்று இயக்கப்படும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும், சீதாவாக்கை ஒடிசி தொடருந்து இன்று காலை 8.25க்கு கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.
அத்துடன், மாலை 6.50 அளவில் அவிஸ்ஸாவலை தொடருந்து நிலையத்தில் இருந்து மீண்டும் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.