ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் அல்லது இரவில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பொத்துவில் தொடக்கம் மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் பல தடவைகள் மழை பெய்யும்.புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
காற்று வடகிழக்கு திசையில் வீசும், காற்றின் வேகம் மணிக்கு 25-35 கி.மீ. காங்கேசன்துறையிலிருந்து மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கடற்பரப்புகளிலும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.
காங்கேசன்துறையிலிருந்து மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கடற்பரப்புகளும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புக்கள் மிதமானதாக காணப்படும்.