Homeஇலங்கைஇன்று பல பிரதேசங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும்.

இன்று பல பிரதேசங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும்.

Published on

கிழக்கு, ஊவா, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் அளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்.

வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மாத்தறையிலிருந்து பொத்துவில், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

காற்று வடகிழக்கு திசையில் வீசும், காற்றின் வேகம் மணிக்கு 25-35 கி.மீ. மன்னாரிலிருந்து புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.

மன்னாரிலிருந்து புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கடற்பரப்புகளும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமாக காணப்படும்.இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

Latest articles

இளம் பெண்களை தகாத தொழிலில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர பெண் கைது!

கொழும்பில் மசாஜ் நிலையங்களுக்கு தெரபிஸ்டுகளை ஆட்சேர்ப்பதற்காக பத்திரிகைகளில் விளம்பரம் செய்து இளம் பெண்களை தகாத தொழில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர...

எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன இளைஞர்கள் சடலங்களாக மீட்பு.

மொனராகலை - வெல்லவாய, எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன 4 இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் (21.03.2023)...

குவைத்தில் சிக்கியிருந்த 48 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

தொழில் நிமித்தம் குவைத் சென்று நீண்ட நாட்களாக இலங்கைக்கு திரும்ப முடியாமல் கடும் பிரச்சினைகளை எதிர்கொண்ட 48 இலங்கை...

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பாடசாலை வெட்டுப்புள்ளிகள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, மாணவர்கள் தாம்...

More like this