இன்று காலை பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இனம் தெரியாத நபர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 02 பேர் ஸ்தலத்தில் பலியானதுடன் மேலும் ஆறு பேர் காயங்களுக்கு உள்ளாகி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, தலைநகரில் மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் வீதியினால் சென்று கொன்டிருந்தவர்கள் மீது அங்குவந்த ஒருவர் மேற்கொன்ட துப்பாக்கி இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவ இடத்திற்கு உடணடியாக வருகைதந்த பொலிஸார் மேற்கொன்ட சுற்றி வளைப்பின்போது துப்பாக்கியுடன் 60 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரையில் தெரியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக அங்குள்ள மக்கள் பெரும் அச்சத்தில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.