கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று காலை நேபாளத்தின் காத்மாண்டு நோக்கி புறப்படவிருந்த விமானம் தாமதமானதால் விமான நிலையத்தில் 200க்கும் மேற்பட்ட பயணிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL-181 ஐ ஏற்றிக்கொண்டு இந்த விமானம் இன்று காலை 08.20 க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து நேபாளத்தின் காத்மாண்டு நோக்கி புறப்படவிருந்தது.
இந்த விமானத்தில் காலை 07.15 மணிக்கு 200க்கும் மேற்பட்ட பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் காலை 11.00 மணி வரை விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை விட்டு வெளியேறவில்லை. அதுவரை பயணிகளும் விமானத்தில் தங்கியிருந்தனர்.