இந்த வருடத்தில் இதுவரை 47,353 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது.
2023 ஜனவரி 01 மற்றும் ஜனவரி 15 க்கு இடைப்பட்ட காலப்பகுதியிலிருந்து அந்த சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் ரஷ்யாவிலிருந்து தீவுக்கு வந்துள்ளனர், மேலும் இது 12,064 என SLTDA தெரிவித்துள்ளது.
மேலும், இந்தியாவில் இருந்து 5,838 சுற்றுலாப் பயணிகளும், 3,945 ஜேர்மன் பிரஜைகளும், 3,862 பிரித்தானிய பிரஜைகளும், பிரான்சிலிருந்து 2,241 சுற்றுலாப் பயணிகளும் இதுவரை நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக SLTDA மேலும் குறிப்பிட்டுள்ளது.
இந்த மாதத்திற்குள் சுமார் 105,000 சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு வரவழைக்க எதிர்பார்க்கப்படுவதாக SLTDA இன் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.