கணிசமான பொருளாதார வீழ்ச்சியின் பின்னர் இந்த ஆண்டு (2023) குறுகிய காலத்தில் இலங்கை பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைய முடியும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையில் பதிவான மிகக் குறைந்த பொருளாதார வளர்ச்சி மற்றும் வரலாற்றில் பதிவான அதிகூடிய பணவீக்கத்துடன் பொருளாதார அபாயங்கள் தீவிரமடைந்து கணிசமான அளவிலான பொருளாதார மந்தநிலையின் பின்னர் இந்த குறுகிய கால பொருளாதார ஸ்திரத்தன்மை இந்த ஆண்டு அடையப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தின் அனைத்து பங்குதாரர்களும் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் கடினமான மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தாலும், அரசாங்கம் மற்றும் மத்திய வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதார ஸ்திரப்படுத்தல் நடவடிக்கைகளை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவது அவசியமானது என இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.