இந்தோனேஷியாவில் படகு ஒன்று கவிழ்ந்தால் 11 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
ரியாவு மாகாணத்தின் கரையோரத்தில் நேற்று இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இப்படகில் 74 பேர் பயணத்தனர். அவர்களில் 62 பேர் காப்பாற்றப்பட்டனர். 11 பேர் உயிரிழந்தனர் . ஒருவரைக் காணவில்லை என தேடுதல் மற்றும் மீட்பு முகவரத்தின் பேச்சாளர் விதோதோ இன்று தெரிவித்துள்ளார்.
உயிரிழநவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் சிறுவர்களுமாவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேம்பிலாஹன் துஙைமுகத்திலிருந்து ரியாவு தீவுகளின் தான்ஜுங் நகரை நோக்கி இப்படகு சென்று கொண்டிருந்தது. இவ்விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.