இந்தோனேசியாவின் இன்றைய தினம் (23.04.2023) அதிகாலை இரண்டு பாரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கள், இந்தோனேசியா- கெபுலாவான் பட்டு (Kepulauan Batu) என்ற இடத்தை தாக்கியுள்ளது. இது 6.1 மெக்னிடியூட் அளவில் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, சில மணிநேரங்களுக்குப் பிறகு 5.8 மெக்னிடியூட் அளவில் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் நிலநடுக்கம் 43 கிலோமீற்றர் ஆழத்திலும், இரண்டாவது நிலநடுக்கம் 40 கிலோமீற்றர் ஆழத்திலும் ஏற்பட்டதாக EMSC தெரிவித்துள்ளது.இதன்போது ஏற்பட்ட சேதங்கள் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.