இந்தோனேசியாவில் 11 ஹெக்டேரில் விளைவிக்கப்பட்டிருந்த கஞ்சா செடிகளை பொலிசார் தீயிட்டு அழித்தனர். இந்தோனேசியாவில் வடக்கு சுமந்தராவின் ஆச்சே என்ற பகுதியில் சட்ட விரோதமாக மரிஜுவானா எனப்படும் கஞ்சா செடிகள் விளைவிக்கப்பட்டு இருப்தாக உள்ளூர் பொலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற போது சுமார் 11 ஹெக்டேரில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை வேரோடு பிடுங்கிய பொலீசார் கஞ்சா செடிகளை தீயிட்டு அழித்தனர். உலகிலேயே மிக கடுமையாக போதைப்பொருள் தடுப்பு சட்டங்கள் அமலில் உள்ள இந்தோனேசியாவில் 11 ஹெக்டேரில் கஞ்சா செடிகள் விளைவிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.