Homeஇலங்கைஇந்திய தொலைக்காட்சியில் பலரையும் கலங்கவைத்த இலங்கைத் தமிழ் சிறுமி

இந்திய தொலைக்காட்சியில் பலரையும் கலங்கவைத்த இலங்கைத் தமிழ் சிறுமி

Published on

இந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடல் நிகழ்ச்சியில் இலங்கையில் இருந்து சென்ற இரண்டு சிறுமிகள் தங்களின் திறமைகளை வெளிக்காட்டி ஒட்டுமொத்த உலக வாழ் தமிழர்களின் கவனத்தினையும் ஈர்த்து வருகின்றனர்.

அந்த வகையில், இந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் யாழ்ப்பாணத்தைச்  சேர்ந்த சிறுமி கில்மிசா இறுதி யுத்தத்தில் காணாமலாக்கப்பட்ட தனது மாமாவினை ஞாபகப்படுத்தி “கண்டா வரச்சொல்லுங்கள்” என்ற பாடலை பாடி அரங்கத்தினையே உருக வைத்துள்ளார்.

ஈழப்போரில் காணாமலாக்கப்பட்ட தனது மாமாவினை ஞாபகப்படுத்தி 30 வருடகால ஈழ யுத்த வலியை உலகளவில் சிறுமி கில்மிசா கொண்டு சேர்த்துள்ளார்.இதனை தொடர்ந்து இறுதி யுத்தத்தில் காணாமலாக்கப்பட்ட பலருக்காகவும் 2 நிமிடம் பிரார்த்தனை செய்யப்பட்டுள்ளது.

குறித்த சிறுமிக்கு சினிமாவில் பாடல் பாடுவதற்கான வாய்ப்பினையும் இந்திய பாடகர் ஸ்ரீநிவாஸ் வழங்கியுள்ளதுடன், பாடலாசிரியர் சினேகன் பல உதவிகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளார்.

மேலும், இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் பின்னர் 162 நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களின் உணர்வுகளுக்கு மீண்டும் ஒருமுறை மதிப்பளிக்கும் வகையில் சிறுமியின் பாடல் அமைந்துள்ளதாகவும் பாடகர் சினேகன் தெரிவித்துள்ளார்.

ஈழத்தில் கில்மிசாவை போன்று பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் தங்களது தந்தையர்கள், தாய்மார்கள், மாமாக்களை தொலைத்துவிட்டு தேடிக்கொண்டிருக்கும் உறவுகளாகவே உள்ளனர் என கவிஞர் தீபச்செல்வனும்யுத்த கால வரலாற்றினை இதன்போது பகிர்ந்துள்ளார்.

Latest articles

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...

உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதை:முதலமைச்சர் அறிவிப்பு

இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்....

More like this