இந்திய அணிக்கெதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது ஆஸ்திரேலியா.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி Mitchell Starc இன் வேகத்தில் தடுமாறி 117 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணி அதிரடியாக ஆடி 11 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்தது.
இரு அணிகளுக்குமிடையிலான 3 ஆவதும் இறுதியுமான போட்டி சென்னையில் புதன்கிழமை நடைபெறும்.