Homeஇந்தியாஇந்தியா-டெல்லி, உத்தர பிரதேசத்தில் பதிவான நிலநடுக்கம்!

இந்தியா-டெல்லி, உத்தர பிரதேசத்தில் பதிவான நிலநடுக்கம்!

Published on

இந்தியா – டெல்லி, உத்தர பிரதேசத்தில் நேற்று இரவு திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கட்டடங்கள் குலுங்கி பொருட்கள் கீழே உருண்டு விழுந்ததால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்து வெட்டவெளியில் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் 3 வினாடிகள் வரை இந்த நிலநடுக்கம் நீடித்ததாக கூறப்படுகிறது.இதேவேளை உத்தர பிரதேச மாநிலம் வசுந்தரா, காசியாபாத் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அந்த பகுதி மக்களும் வீடுகளை விட்டு வெளியேறி வெட்டவெளியில் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைத்தொடரை மையமாகக் கொண்டு ரிக்டர் அளவில் 6.6 ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைமட்டத்திலிருந்து சுமார் 184 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானை தொடர்ந்து பாகிஸ்தான், தஜிகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலும், வட இந்திய மாநிலங்களான டெல்லி, பஞ்சாப், காஷ்மீர், அரியானா உள்ளிட்ட பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

Latest articles

இலங்கையர்களுக்கு வெளியான எச்சரிக்கை; அழகு நிலையத்தில் இடம்பெற்ற மோசடி

கொழும்பு, ராஜகிரிய பகுதியில் புற்று நோயாளர்களுக்கு பயன்படுத்தப்படும் ஊசிகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தும் மற்றுமொரு அழகு நிலையம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. சினிமா நடிகைகள்...

ஆலய தேர்த் திருவிழாவில் பூசாரி உயிரிழப்பு

களுத்துறையில் ஆலய தேர்த் திருவிழாவின் போது தீ விபத்தில் சிக்கி பூசாரி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்...

தன்னை தானே சுட்டு விபரீத முடிவெடுத்த விமானப்படை வீரர்!

பம்பலப்பிட்டி பொன்சேகா பிளேஸ் பகுதியில் விமானப்படை வீரர் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருகோணமலை...

பாடசாலை மைதானம் ஒன்றில் திடீரென தரையிறங்கிய உலங்கு வானூர்தியால் பரபரப்பு

அனுராதபுரம் கலென்பிந்துனுவெவ - பலுகொல்லாகம பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் நேற்று காலை தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான உலங்கு வானூர்த்தி...

More like this