இந்தியாவுக்கும் – இலங்கைக்கும் இடையில் குறைந்த தூர பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பாதீட்டுக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றுள்ளது.
இதன்போது பேசிய அமைச்சர் வேலு, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் குறைந்த தூர பயணிகள் கப்பல் போக்குவரத்தை ராமேஸ்வரம் – தலைமன்னார், ராமேஸ்வரம் – காங்கேசந்துறை ஆகிய வழித்தடங்களில் ஆரம்பிக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.எனினும் எப்போது இந்த சேவை ஆரம்பிக்கப்படும் என்பதினை அவர் கூறவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.