இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 169 ஆக பதிவாகியுள்ளது என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2525 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,772 ஆக உள்ளது.
இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,53,865 ஆக பதிவாகியுள்ளது.நாடு முழுவதும் இதுவரை 220,64,08,507 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 6,747 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.