Homeஇந்தியாஇந்தியாவில் அதிகரித்து வரும் கோவிட் தொற்று!

இந்தியாவில் அதிகரித்து வரும் கோவிட் தொற்று!

Published on

இந்தியாவில் ஒரே நாளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதன்படி இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 4,435 பேருக்கு கொரோனா கோவிட் உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன், கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 21,179ல் இருந்து 23,091 ஆக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,916 ஆக உள்ளதாகவும் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,79,712 ஆகப் பதிவாகியுள்ளது என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா முழுவதும் இதுவரை 220,66,16,373 டோஸ் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.நேற்றைய தினம் (04.04.2023) ஒரே நாளில் 1,979 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மக்கள் அதிக கூடும் இடங்களில் முககவசம் அணியவும், தொற்றுக்கான அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்திக் கொள்ளவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே நேரம் கோவிட் பரவலைச் சமாளிக்கத் தேவையான ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது. குறிப்பாகத் தீவிர சிகிச்சைப் பிரிவு, மருத்துவ ஆக்சிஜன் விநியோகம் உள்ளிட்டவற்றைத் தயார் நிலையில் வைக்குமாறு மருத்துவமனைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Latest articles

இலங்கையர்களுக்கு வெளியான எச்சரிக்கை; அழகு நிலையத்தில் இடம்பெற்ற மோசடி

கொழும்பு, ராஜகிரிய பகுதியில் புற்று நோயாளர்களுக்கு பயன்படுத்தப்படும் ஊசிகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தும் மற்றுமொரு அழகு நிலையம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. சினிமா நடிகைகள்...

ஆலய தேர்த் திருவிழாவில் பூசாரி உயிரிழப்பு

களுத்துறையில் ஆலய தேர்த் திருவிழாவின் போது தீ விபத்தில் சிக்கி பூசாரி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்...

தன்னை தானே சுட்டு விபரீத முடிவெடுத்த விமானப்படை வீரர்!

பம்பலப்பிட்டி பொன்சேகா பிளேஸ் பகுதியில் விமானப்படை வீரர் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருகோணமலை...

பாடசாலை மைதானம் ஒன்றில் திடீரென தரையிறங்கிய உலங்கு வானூர்தியால் பரபரப்பு

அனுராதபுரம் கலென்பிந்துனுவெவ - பலுகொல்லாகம பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் நேற்று காலை தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான உலங்கு வானூர்த்தி...

More like this