செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇந்தியாஇந்தியாவில் அதிகரிக்கும் கோவிட் தொற்று

இந்தியாவில் அதிகரிக்கும் கோவிட் தொற்று

Published on

spot_img
spot_img

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் பாதிப்பு 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக இந்தியச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கோவிட் பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 223 நாட்களில் இல்லாத அளவில் நேற்றைய தினம் (12.04.2023) ஒருநாளில் கோவிட் பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

இந்நிலையில், இன்றைய தினம் (13.04.2023) இந்தியச் சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,158 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் நேற்றுடன் ஒப்பிடுகையில் பாதிப்பு ஒரே நாளில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது எனவும் கூறியுள்ளது.

மேலும், தினசரி கோவிட் பாதிப்பு 10 ஆயிரத்தைத் தாண்டியிருப்பது கடந்த 8 மாதங்களில் இதுவே முதல் முறையாகும்.

தினசரி பாதிப்பு விகிதம் 4.42 சதவீதமாகவும், இந்த வரத்தின் பாதிப்பு விகிதம் 4.02 சதவீதமாகவும் உள்ளது என்றும் நேற்றைய தினம் அதிகபட்சமாகக் கேரளாவில் 3,416 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தியா முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 47 இலட்சத்து 86 ஆயிரத்து 160 ஆக உயர்ந்துள்ளதாகவும் இந்தியச் சுகாதாரத்துறை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest articles

பிரசார மேடை இடிந்து வீழ்ந்ததில் 9 பேர் உயிரிழப்பு : பலர் படுகாயம் 

மெக்சிகோவின் நியூவோ லியோன் பகுதியில் தேர்தல் பிரசாரத்தின் போது, மேடையின் ஒருபகுதி இடிந்து வீழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில்...

தேசிய டெங்கு தடுப்பு வாரம் பிரகடனம்…..

தேசிய டெங்கு தடுப்பு வாரம் 26ஆம் திகதி முதல் ஜூன் 01ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மழையுடன் நாடளாவிய ரீதியில்...

ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழப்பு…..

காலி, புஸ்ஸ, பிந்தலிய சந்தியில் உள்ள பாதுகாப்பு கடவையில் மோட்டார் சைக்கிள் ஒன்று ரயிலுடன் மோதி இடம்பெற்ற கோர...

சுகாதார தொழிற்சங்கள் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…..

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் எதிர்வரும் 28ஆம் திகதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. உத்தியோகபூர்வ...

More like this