Homeஇந்தியாஇந்தியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Published on

இந்தியாவில் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று பிற்பகலில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.

கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதும் ஆங்காங்கே அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஜப்பான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா, நியூ பிரிட்டன், பப்புவா நியூ கினியா ஆகிய பகுதிகளில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இதேபோல், இந்தியாவிலும் ஆங்காங்கே நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.

இவ்வாறான நிலையில் மேகாலயாவில் இன்று காலை 9.49 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேகாலயாவின் தூர நகரில் இருந்து 27 கி.மீ தொலைவில் பூமிக்கடியில் 25.கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளிகளாக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று பிற்பகலில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ராஜ்கோட்டில் பிற்பகலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 4.3 ஆக பதிவாகியுள்ளது. திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் ராஜ்கோட்டை சேர்ந்த மக்கள் பீதி அடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.மேலும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் உத்தியோகபூர்வமாக இதுவரை அறிவிக்கப்படவில்லை.

Latest articles

யாழ்ப்பாணம் – தமிழகம் இடையே படகுச் சேவை ஆரம்பம்!

யாழ். காங்கேசன்துறை - தமிழகம் இடையிலான பயணிகள் படகுச் சேவை அடுத்த மாத இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள்,...

நாட்டின் இருவேறு வாகன விபத்துக்களில் ஒருவர் உயிரிழப்பு 14 பேர் படுகாயம்

நாட்டின் இருவேறு பகுதிகளில்  ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,  14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ்...

டீசல் நிரப்பிய போது தனியார் பஸ்சில் திடீர் தீ: நெல்லையில் இன்று காலை பரபரப்பு

நெல்லை வண்ணார்பேட்டை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் இன்று காலை தனியார் பஸ் ஒன்று டீசல் நிரப்புவதற்காக வந்தது....

யாழில் தவறான முடிவால் உயிரிழந்த முதியவர்.

யாழில் மகன் அனுப்பிய பணத்தினை நம்பிக்கை அடிப்படையில் பெண்ணொருவருக்கு வழங்கிய முதியவரொருவர் உயிரை மாய்த்துள்ளார்.இந்த சம்பவம் நேற்று (19.03.2023)...

More like this