செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைஇந்தியாவிலிருந்து மருத்துவப் பொருட்கள் கொள்வனவு செய்வது தொடர்பில் அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல்

இந்தியாவிலிருந்து மருத்துவப் பொருட்கள் கொள்வனவு செய்வது தொடர்பில் அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல்

Published on

spot_img
spot_img

இரண்டு இந்தியத் தனியார் நிறுவனங்களிடமிருந்து மருத்துவப் பொருட்களைக் கொள்வனவு செய்வது தொடர்பில் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா, உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

அமைச்சர்கள் அமைச்சரவை, சுகாதார அமைச்சர், சுகாதார அமைச்சு மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் என்பன தொடர்பில் மேற்கொண்ட நடவடிக்கைகள் எதிராகவே இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

47 பேர் இந்த மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

பதிவு செய்யப்படாத தனியார் விநியோகஸ்தர்கள் மூலம் மருத்துவப் பொருட்களை வாங்குவதில் அமைச்சர்களின் அமைச்சரவையின் பங்கு.

பதிவு செய்யப்படாத விநியோகஸ்தர்களிடம் இருந்து மருத்துவப் பொருட்களை வாங்குவதற்குப் பதிவு விலக்கு வழங்குவதில் தேசிய மருந்தாக்கல் ஒழுங்குமுறை ஆணையகத்தின் பங்கு.அவசரகால கொள்முதல் செயல்முறை உட்படக் கொள்முதல் வழிகாட்டுதல்களுடன் இணங்காமைசுகாதார அமைச்சர் மற்றும் மருந்தாக்கல் ஆணையத் தலைமை நிர்வாக அதிகாரியின் செயல்முறையைத் தவறாகப் பயன்படுத்துதல் என்பவற்றைச் சவாலுக்கு உட்படுத்தி இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மருந்துக் கொள்வனவு, மக்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வைக் கடுமையாகப் புறக்கணிப்பதுடன், பொதுமக்களின் நம்பிக்கை மற்றும் பொது நிதியை முழுவதுமாக துஷ்பிரயோகம் செய்துள்ளது.

மேலும், குடிமக்களின் அடிப்படை உரிமையான சமத்துவம் மற்றும் தகவல்களை அணுகும் உரிமை ஆகியவை இதன் மூலம் மீறப்பட்ட மனுவில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Latest articles

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி ஆண்டு – சித்திரை 1 - ஞாயிற்றுக்கிழமை (14.04.2024) நட்சத்திரம் : திருவாதிரை காலை 5.55 வரை பின்னர்...

உயிரிழந்த ஹமாஸ் படைத் தளபதி ….

மேற்கு கரையில் இடம்பெற்ற மோதலில் உள்ளூா் ஹமாஸ் படைத் தளபதி உட்பட 2 பலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...

மன்னர் சார்லஸுன் படத்துடன் வெளியாகும் பிரித்தானிய பணம்….

பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத் மறைந்த பிறகு மூன்றாம் சார்லஸ் அந்நாட்டின் மன்னராக பொறுப்பேற்றார். இதனிடையே மன்னர் சார்லஸுன் படத்துடன்...

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்….

நிகழும் மங்களகரமான குரோதி வருடம் உத்தராயணப் புண்ணிய காலம் இந்த தமிழ் புத்தாண்டு பிறந்துள்ளது. குரோதி வருடத்திற்கான பலன் இந்த ஆண்டு...

More like this

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி ஆண்டு – சித்திரை 1 - ஞாயிற்றுக்கிழமை (14.04.2024) நட்சத்திரம் : திருவாதிரை காலை 5.55 வரை பின்னர்...

உயிரிழந்த ஹமாஸ் படைத் தளபதி ….

மேற்கு கரையில் இடம்பெற்ற மோதலில் உள்ளூா் ஹமாஸ் படைத் தளபதி உட்பட 2 பலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...

மன்னர் சார்லஸுன் படத்துடன் வெளியாகும் பிரித்தானிய பணம்….

பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத் மறைந்த பிறகு மூன்றாம் சார்லஸ் அந்நாட்டின் மன்னராக பொறுப்பேற்றார். இதனிடையே மன்னர் சார்லஸுன் படத்துடன்...