செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇந்தியாஇது வேற லெவல் பிளான்.. லிஸ்ட்லயே இல்லையே.. பிளைட் ஏறும் ஸ்டாலின்.. அடித்து தூக்கும் திமுக?

இது வேற லெவல் பிளான்.. லிஸ்ட்லயே இல்லையே.. பிளைட் ஏறும் ஸ்டாலின்.. அடித்து தூக்கும் திமுக?

Published on

spot_img
spot_img

ஜம்மு காஷ்மீரில் நிறைவு பெற இருக்கும் பாரத் ஜோடோ யாத்திரையின் இறுதி நாளில் பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் மூத்த எம்பி ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை தேசிய அளவில் ஹிட் அடித்துள்ளது. எதிர்பார்த்ததை விட மக்கள் இந்த யாத்திரைக்கு அதிக வரவேற்பு கொடுத்துள்ளனர்.
தேசிய அரசியலிலும் இந்த யாத்திரை மிகப்பெரிய அளவில் திருப்பத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக காங்கிரஸ் கட்சியை அடிமட்டத்தில் இருந்து மீண்டும் மீட்க இந்த யாத்திரை உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் நிர்வாகிகள் மட்டுமின்றி காங்கிரஸ் சாராத பல அறிவுஜீவிகள், இடதுசாரிகள், எழுத்தாளர்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். நாடு முழுக்க இந்த யாத்திரை எதிர்பார்த்ததை விட அதிகம் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் இதில் மற்ற எதிர்க்கட்சிகள் பெரிதாக அங்கும் கலந்து கொள்ளவில்லை. கன்னியாகுமரியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்ததை தவிர மற்ற மாநிலங்களில் பெரிதாக வேறு எதிர்க்கட்சிகள் இந்த யாத்திரைக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை . 3750 கிலோமீட்டருக்கு இந்த யாத்திரை நடத்தப்படுகிறது. 150 நாட்கள் காங்கிரஸ் சார்பாக இந்த யாத்திரை நடப்படும் நிலையில், இன்னும் 17 நாட்கள் மட்டுமே மிச்சம் உள்ளது.
தினமும் 20- 30 கிலோ மீட்டர் தூரம் ராகுல் காந்தி இந்த நடைப்பயணத்தில் பயணம் மேற்கொண்டார். குறிப்பிட்ட சில நாட்கள் ஓய்வை தவிர மற்ற நாட்கள் எல்லாம் ராகுல் காந்தி தீவிரமாக நடந்தார். இந்த பயணத்தை கன்னியாகுமரியில் இருந்து ராகுல் காந்தி தொடங்கினார். அதன்பின் கேரளா சென்றவர், கேரளாவில் பெரும்பாலான நகரங்களை கவர் செய்தார். கேரளா முடிவில் வயநாடு சென்றுவிட்டு பின்னர் கூடலூர் வழியாக கர்நாடகா சென்றார். பின்னர் அங்கிருந்து ஆந்திரா, தெலுங்கானா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி கடந்து தற்போது ராகுல் காந்தி சென்று கொண்டு இருக்கிறார்.
இந்த யாத்திரை ஜனவரி 30ம் தேதி ஜம்மு காஷ்மீரில் நிறைவு பெறுகிறது. ஸ்ரீநகரில் ராகுல் காந்தி தேசிய கொடியை ஏற்ற உள்ளார். நிறைவு நாள் விழா பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. காங்கிரஸ் தலைவர்கள் பலரும் நிறைவு விழாவில் கலந்து கொள்ள உள்ளனர். அதே சமயம் காங்கிரஸ் சார்பாக 21 அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது. மதசார்பற்ற கட்சிகள், இடதுசாரிகள், திராவிட கட்சிகள், தென் மாநில கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது. இவர்களை பேரணிக்கு வரும்படியும், கடைசி நாளில் பேரணியில் கலந்துகொள்ளும்படியும் காங்கிரஸ் தலைவர் கார்கே சார்பாக அழைப்பு விடுக்கப்பட உள்ளது.

இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் ஜம்மு காஷ்மீர் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேரணியை தொடங்கி வைத்ததே ஸ்டாலின்தான். இந்த நிலையில் நிறைவு விழாவிலும் ஸ்டாலின் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தேசிய அளவில் கவனிக்கப்பட உள்ளது. முதல்வர் ஸ்டாலினும் தேசிய அளவில் கவனம் பெற்று வருகிறார். மோடியை தீவிரமாக எதிர்க்கும் தலைவராக ஸ்டாலின் இருக்கிறார். இந்த நிலையில் நிறைவு விழாவில் கலந்து கொள்ளும் பிளானும் ஸ்டாலினிடம் இருப்பதாக கூறப்படுகிறது.

தேசிய அரசியலில் முக்கியமான தலைவராக ஸ்டாலின் கவனம் பெற்று வரும் நிலையில்தான் அவரின் இந்த பயணம் தொடர்பாக வெளியாகும் தகவல்கள் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. ஆனால் இந்த பயணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. தேசிய அளவில் 20 க்கும் அதிகமான கட்சிகள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியுடன் லோக்சபா 2024 தேர்தலில் கூட்டணியை தொடர வேண்டும் என்ற திட்டத்தில் திமுக உள்ளது. இதன் மூலம் அதிமுக + காங்கிரஸ் கூட்டணி உருவாவதை தடுக்க முடியும். இதற்காகவும் ஸ்டாலின் ஸ்ரீநகர் செல்ல திட்டமிடுவார் என்று அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest articles

மிக்ஜம்” புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடிகர் விஜய் ஆதங்கம் வெளிப்படுத்தியுள்ளார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் "மிக்ஜாம்" புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும்...

வாள் வெட்டுடன் சமந்தப்பட்ட வாகனம் மீட்பு, புதுக்குடியிருப்பில் பதுங்கியிருந்த இருவர் அதிரடியாக கைது!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திய வாகனம் முல்லைத்தீவு பகுதி புதுக்குடியிருப்பில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பகுதியில் பதுங்கியிருந்த...

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமனம்

ஜனாதிபதியின் செயலாளர் E.M.S.B.ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் இதற்கான நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பெருந்தோட்ட நிறுவனங்களுடனான...

முதலாவது T/20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி வெற்றி

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து மகளிர் அணி T/20 மற்றும் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. இன்றைய தினம் முதலாவது T/20...

More like this

மிக்ஜம்” புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடிகர் விஜய் ஆதங்கம் வெளிப்படுத்தியுள்ளார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் "மிக்ஜாம்" புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும்...

வாள் வெட்டுடன் சமந்தப்பட்ட வாகனம் மீட்பு, புதுக்குடியிருப்பில் பதுங்கியிருந்த இருவர் அதிரடியாக கைது!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திய வாகனம் முல்லைத்தீவு பகுதி புதுக்குடியிருப்பில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பகுதியில் பதுங்கியிருந்த...

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமனம்

ஜனாதிபதியின் செயலாளர் E.M.S.B.ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் இதற்கான நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பெருந்தோட்ட நிறுவனங்களுடனான...