2023 ஜூலை மாதம் தான் இதுவரை பதிவு செய்யப்படாத மிக அதிக வெப்பமான மாதம் என ஐரோப்பிய விஞ்ஞானிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஐரோப்பிய விண்வௌி திட்டத்தின் கோபர்நிகஸ் காலநிலை மாற்றத்துக்கான பிரிவு வௌியிட்டுள்ள அறிவிப்பில், “பூமியின் வெப்பநிலையை மனிதர்கள் கணக்கிட தொடங்கிய நாளிலிருந்து தற்போது வரை பதிவான வெப்பநிலையில் 2023 ஜூலை மாதம் பதிவான வெப்பம் தான் மிகவும் அதிகம்.
அதாவது 16.95 டிகிரி செல்சியஸ்(62.51 டிகிரி பாரன்ஹீட்) இது கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதத்தில் பதிவான அதிக வெப்பத்தை விட 0.33 டிகிரி செல்சியஸ் அதிகம் பதிவாகியுள்ளது” என்று தெரிவித்துள்ளது.