குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கடந்த இரண்டு வருடங்களில் இணைய குற்றச் செயல்களில் ஈடுபட்ட 386 பேரை கைது செய்ய முடிந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதன் ஊடாக மேற்கொள்ளப்படும் மோசடிகள் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களும் உள்ளடங்குகின்றனர்.
கணினி மற்றும் இணையதள குற்றங்கள் தொடர்பாக கடந்த இரண்டு ஆண்டுகளில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த புகார்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்துக்கும் அதிகமாகும்.