Homeஇந்தியாஇடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியலில் முறைகேடு உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையத்தில்...

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியலில் முறைகேடு உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார்

Published on

புதுடெல்லி, இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியலில் முறைகேடு உள்ளதாக தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த சி.வி.சண்முகம் புகார் அளித்திருந்தார். டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் அவர் அளித்த புகாரில், வாக்களர் பட்டியலில் இடம்பெற்றிருந்த பெரும்பாலானோரின் பெயர்கள் தொகுதிக்கு தொடர்பு இல்லாதவர்கள் என்றும், தொகுதியை சேர்ந்த சுமார் 8 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் இரண்டுமுறை பதிவு செய்யப்பட்டு உள்ளது என்றும் அவர் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிற்கு இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தை தலைமை அதிகாரி சத்யபிரதா சாகு, மாவட்ட தேர்தல் அதிகாரி அனுப்பிவைத்து இருக்கிறார். இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி அனுப்பக்கூடிய விரிவான அறிக்கையை தலைமை அதிகாரி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப இருக்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் இருப்பதாகவும், விதிமீறல்கள் நடைபெறுவதாகவும் தொடர்ந்து அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Latest articles

யாழ்ப்பாணம் – தமிழகம் இடையே படகுச் சேவை ஆரம்பம்!

யாழ். காங்கேசன்துறை - தமிழகம் இடையிலான பயணிகள் படகுச் சேவை அடுத்த மாத இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள்,...

நாட்டின் இருவேறு வாகன விபத்துக்களில் ஒருவர் உயிரிழப்பு 14 பேர் படுகாயம்

நாட்டின் இருவேறு பகுதிகளில்  ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,  14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ்...

டீசல் நிரப்பிய போது தனியார் பஸ்சில் திடீர் தீ: நெல்லையில் இன்று காலை பரபரப்பு

நெல்லை வண்ணார்பேட்டை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் இன்று காலை தனியார் பஸ் ஒன்று டீசல் நிரப்புவதற்காக வந்தது....

யாழில் தவறான முடிவால் உயிரிழந்த முதியவர்.

யாழில் மகன் அனுப்பிய பணத்தினை நம்பிக்கை அடிப்படையில் பெண்ணொருவருக்கு வழங்கிய முதியவரொருவர் உயிரை மாய்த்துள்ளார்.இந்த சம்பவம் நேற்று (19.03.2023)...

More like this