யாழில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் லேசர் லைட் பாவித்ததால் 50ற்“கும் மேற்பட்டவர்களுக்கு கண் பாதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவமானது நேற்று சாவகச்சேரி கைதடி பகுதியில் உள்ள சனசமூக நிலையம் ஒன்றில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியிலையே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.
சனசமூக நிலையத்தில் இடம்பெற்ற கச்சேரியில் லேசர் கதிர்கள் மற்றும் புகை அதிகமாக வெளிப்பட்டமையினால் நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கண் எரிச்சல், கண் வீக்கம், தொடர் கண்ணீர் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கைந்து பேர் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கண் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.