Homeஉலகம்இங்கிலாந்து ராணி கமிலாவுக்கு கொரோனா

இங்கிலாந்து ராணி கமிலாவுக்கு கொரோனா

Published on

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மறைவுக்கு பின்னர் அவரது மகன் சார்லஸ் மன்னராக அரியணை ஏறினார். அதனை தொடர்ந்து, இளவரசியாக இருந்து வந்த சார்லசின் மனைவி கமிலா ராணி (குயின் கன்சார்ட்) பட்டம் பெற்றார். இந்த நிலையில் மன்னர் 3-ம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். இந்த சூழலில் ராணி கமிலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. இது குறித்து அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராணி கமிலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் செல்லும் அவரது பயணத்தை ஒத்திவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அங்கு நடக்கும் பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியாமல் போனதற்காக ராணி வருத்தம் தெரிவித்தார்” என கூறப்பட்டுள்ளது. 75 வயதான ராணி கமிலா கொரோனா தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளார் என்பதும், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் கொரோனா தொற்றுக்கு ஆளானதும் குறிப்பிடத்தக்கது.

Latest articles

இளம் பெண்களை தகாத தொழிலில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர பெண் கைது!

கொழும்பில் மசாஜ் நிலையங்களுக்கு தெரபிஸ்டுகளை ஆட்சேர்ப்பதற்காக பத்திரிகைகளில் விளம்பரம் செய்து இளம் பெண்களை தகாத தொழில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர...

எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன இளைஞர்கள் சடலங்களாக மீட்பு.

மொனராகலை - வெல்லவாய, எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன 4 இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் (21.03.2023)...

குவைத்தில் சிக்கியிருந்த 48 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

தொழில் நிமித்தம் குவைத் சென்று நீண்ட நாட்களாக இலங்கைக்கு திரும்ப முடியாமல் கடும் பிரச்சினைகளை எதிர்கொண்ட 48 இலங்கை...

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பாடசாலை வெட்டுப்புள்ளிகள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, மாணவர்கள் தாம்...

More like this