பருத்தித்துறை நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் 16 பேர் ஒரு லட்சம் ரூபா ஒரு லட்சம் தண்டப்பணம் செலுத்தியுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் ஆஸ்திரேலியா செல்ல முற்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் குற்றத்தை ஒப்புக்கொண்ட மேலும் 16 பேர் இவ்வாறு தண்டப்பணத்தை நேற்று (07) செலுத்தினர்.
கடந்த 2013 ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச்செல்ல முற்பட்டதாக தெரிவித்து பருத்தித்துறை பொலிசாரால் 55 பேர் கைது செய்யப்பட்டு பருத்தித்துறை நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்து வந்த நிலையில் கடந்த 07.07. 2023 அன்று வழக்கு விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
சந்தேகநபர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் தலா ஒரு லட்சம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டது. அன்றைய தினம் ஒன்பது பேர் தண்டபாணத்தை செலுத்தி இருந்த நிலையில் மிகுதி 24 பேரும் நேற்று தண்டப்பணம் செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று (07) வழக்கு மீண்டும் பருத்தித்துறை நீதிமன்றில் நீதவான் கிருசாந்தன் பொன்னுத்துரை முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் 16 பேர் ஒரு லட்சம் ரூபாய் தண்டப்பனத்தை செலுத்தியுள்ளனர்.