Homeசினிமாஆஸ்கர் அரங்கை அதிர வைத்த 'நாட்டு நாட்டு' பாடல்.

ஆஸ்கர் அரங்கை அதிர வைத்த ‘நாட்டு நாட்டு’ பாடல்.

Published on

ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் ‘ஆர்ஆர்ஆர்’. இப்படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் சாதனையும் நிகழ்த்தியது. இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம ராஜு கதாபாத்திரத்தில் ராம் சரணும் நடித்திருந்தனர். இப்படம் அண்மையில் கோல்டன் குளோப் விருதை வென்றது. இதையடுத்து ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் நாட்டு நாட்டு தெலுங்கு பாடலை பாடிய ராகுல் சிப்லிகுன்ச் மற்றும் கால பைரவா இருவரும் இந்த பாடலை பாடவுள்ளதாக சமீபத்தில் ஆஸ்கர் அகடமி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்நிலையில், இன்று 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், நடிகை தீபிகா படுகோனே ‘நாட்டு நாட்டு’ பாடல் அறிவிப்பை மேடையில் அறிவித்ததையடுத்து ஆஸ்கர் மேடையில் பாடல் ஒலிப்பரப்பட்டு நடனக்குழுவினர் நடனம் ஆடினர். இந்த நடனத்திற்கு ஆஸ்கர் விழா விருந்தினர்கள் எழுந்து நின்று பாராட்டுகளை தெரிவித்தனர். மேலும், ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest articles

இலங்கையில் இப்படியொரு திருடன்! வியப்பில் நாட்டு மக்கள்

இலங்கையில் திருடன் ஒருவனின் செயற்பாடு குறித்து நாட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் ரயிலில்...

தனியார் வகுப்பிற்கு சென்று திரும்பிய 14 வயது மாணவி துஸ்பிரயோகம் – இளைஞன் தலைமறைவு!

தனியார் வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 14 வயது சிறுமிக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை...

சர்ச்சையில் சிக்கிய யாழ்.மாநகரசபை ஆணையாளர்!

யாழ்.மாநகரசபை ஆணையாளர் பெண் உத்தியோகத்தர் ஒருவருடன் தொலைபேசியில் பேசியபோது பயன்படுத்திய வார்த்தை பிரயோகங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறலாம் என...

திருகோணமலையில் கஞ்சா செடிகளை வளர்த்த நபர் கைது!

கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபரொருவரை திருகோணமலை- நிலாவளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.திருகோணமலை- பாலையூற்று முருகன் கோயில்...

More like this