வாழைச்சேனையில் இருந்து ஆழ்கடல் மீன்பிடித் தொழிலுக்காக சென்ற படகு ஒன்று நேற்று (16) இரவு ஒலுவில் துறைமுகத்துக்கு நேரே ஆழ்கடல் பகுதியில் தீப்பற்றி எரிந்துள்ளது.
குறித்த படகில் ஐந்து மீனவர்கள் கடல் தொழிலுக்காக சென்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
தகவல் அறிந்து மீனவர்களை மீட்பதற்காக கடற்படையின் சிறிய படகு ஒன்று அவ்விடத்தை நோக்கி விரைந்துள்ளதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே அம்பாறைப் பிராந்திய கடற்பரப்பில் நிலை கொண்டுள்ள பல ஆழ்கடல் மற்றும் சிறிய ரக மீன்பிடிப் படகுகளும் தீப்பற்றி எரியும் படகு நிலைகொண்டுள்ள பிரதேசத்தை நோக்கி நகர்வதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
தற்போது மீன்பிடிப் படகில் ஏற்பட்ட தீவிபத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் உள்ளவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.