அநுராதபுரம், கம்பீரிகஸ்வெவ பிரதேசத்தில் நேற்று (24) பாடசாலை போக்குவரத்து சேவைப் பேருந்தில் மோதி ஆறு வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
பள்ளி முடிந்து பேருந்தில் பயணித்த குழந்தை, முன்பக்க வாசலில் இருந்து இறங்கிய போது, பேருந்தில் மோதி விபத்துக்குள்ளானது. படுகாயமடைந்த அவர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் பரசங்கஸ்வெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.