ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் கே.வி.பி.புரம் மண்டலத்தில் உள்ள ஆரே அருவிக்கு, சென்னையை சேர்ந்த மாணவர்களான சதீஷ், விஷால் மற்றும் அவரது நண்பர்கள் குளிக்க வந்துள்ளனர். அருவியில் குளித்த பின் அருகில் இருந்த குட்டையில் குளித்தனர். அப்போது, சதீஷ், விஷால் ஆகிய இருவரும் நீரில் மூழ்கினர். உடன் வந்த சக நண்பர்கள் காப்பாற்ற முயற்சி செய்தும் பலன் அளிக்காமல் இருவரும் உயிரிழந்தனர்.