ஆயுதபூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு நாளை முதல் தமிழ்நாடு முழுவதும் 4000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. வரும் 23ம் தேதி திங்கட்கிழமை ஆயுதபூஜை கொண்டாடப்பட உள்ளது. சனி, ஞாயிறு திங்கள் என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் பணிபுரிபவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம் இதனால் முக்கிய நகரங்களிலில் இருந்து நாளை முதல் சிறப்பு பேருந்துகளை அரசு இயக்கவுள்ளது.
அதன்படி தினசரி இயக்கப்படுகின்ற 2100 பேருந்துகளுடன் நாளை முதல் 22ம் தேதி வரை கூடுதலாக சென்னையிலிருந்து 2265 சிறப்பு பேருந்துகளும் பெங்களூரு, கோயம்பத்தூர், திருப்பூர் ஆகிய நகரங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு 1700 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.
சென்னை மக்களுக்காக கோயம்பேடு, தாம்பரம், பூவிருந்தவல்லி ஆகிய இடங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.அதன்படி தாம்பரம் மெக்ஸ் பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
பூவிருந்தவல்லி பைபாஸிலிருந்து வேலூர் ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மயிலாடுதுறை, தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, அரியலூர், ஜெயன்கொண்டம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருசெந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, ராமநாதபுரம், சேலம், கோயம்பத்தூர், பெங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் குருவாயூர் ஆகிய இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.