செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு சாரதி அனுமதிப் பத்திரம் வழங்க தடை!

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு சாரதி அனுமதிப் பத்திரம் வழங்க தடை!

Published on

spot_img
spot_img

ஆப்கானிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் சூழலில், பெண்களுக்கு சாரதி அனுமதிப் பத்திரம் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆப்கனிலிருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் நேட்டோ படைகள் பின் வாங்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர்.

தலிபான்கள் ஆட்சி அமைத்த பிறகு மீண்டும் மனித உரிமை மீறல், பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் உள்ளிட்டவை அதிகரித்துள்ளன. சில நாள்களுக்கு முன், 6 ஆம் வகுப்பிற்கு மேல் பெண் குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்ல தடை விதித்தனர். இந்த சம்பவத்திற்கு உலகளவில் பல்வேறு நாடுகள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இந்நிலையில், ஆப்கன் தலைநகர் காபூல் மற்றும் பிற மாகாணங்களில் பெண்களுக்கு சாரதி அனுமதிப் பத்திரம் வழங்க தலிபான்கள் தடை விதித்துள்ளதாக உள்ளூர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து, சர்வதேச உதவிகள் நிறுத்தப்பட்டதால் உணவு பாதுகாப்பின்மையில் உலகளவில் முதல் இடத்திற்கு ஆப்கானிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது. 2.3 கோடி மக்கள் உணவில்லாமல் தவித்து வருகின்றனர். மேலும், மொத்த மக்கள் தொகையில் 95 சதவீதம் பேர் சரியான உணவு கிடைக்காமல் உள்ளனர்.

Latest articles

கணவனின் சடலத்திற்கு உரிமை கோரும் நான்கு மனைவிகள்…..

குளியாப்பிட்டிய மருத்துவ பீடத்திற்கு அருகில் இரண்டு சைக்கிள்கள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபரின் சடலத்தை ஏற்றுக் கொள்ள...

பேருந்து சில்லில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த பாடசாலை மாணவி….

புதிய கருவாத்தோட்டம் பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்றின் சில்லில் சிக்கி பாடசாலை மாணவி ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். மல்கொல்ல படிதலாவ...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட பிலிப்பைன்ஸ் பெண்…..

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கொக்கேய்ன் போதைப்பொருள் தொகையுடன் பிலிப்பைன்ஸ் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய...

புத்தளத்தில் மின்சாரம் தாக்கி வர்த்தகர் உயிரிழப்பு…..

புத்தளம், முந்தல் பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று முந்தல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கம்பஹா, இம்புல்கொட பிரதேசத்தைச்...

More like this