ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.6 ஆகப் பதிவாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் ஃபைசாபாத் பகுதியில் தொடர்ந்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. ரிக்டர் அளவு குறைவாக உள்ளதால் பெரியதாகத் தாக்கம் ஏற்படவில்லை.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் நேற்று மற்றும் இன்று என்று தொடர்ந்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று காலை 8 மணி அளவில் ஆப்கானிஸ்தானில் ஃபைசாபாத் பகுதிக்கு 86 கிலோ மீட்டர் தொலைவில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, இன்று காலை 4.45 மணி அளவில் ஃபைசாபாத் பகுதிக்கு 103 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவில் 4.6 ஆகப் பதிவாகியுள்ளது. தற்போது, மீண்டும் இன்று காலை 9 மணியளவில் அதே பகுதியில் 104 கிலோ மீட்டர் தொலைவில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நில அதிர்வுகளைக் கண்காணிக்கும் இந்திய நில அதிர்வுக்கான தேசிய மையம், இந்த தகவலை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து, நேற்று அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தொடர்ந்து 4.1 மற்றும் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.