ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள சைபாத் நகரில் இருந்து 101 கிலோமீட்டர் தொலைவில் இன்று காலை 8 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.1 என்ற அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் பைசாபாத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ரிக்டர் ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் (NCS) தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத் நகருக்கு தெற்கே 101.கிமீ தொலைவில் காலை 07:57 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக ஆப்கானிஸ்தான் நாட்டின் ஃபைசாபாத் மற்றும் தஜிகிஸ்தான் நாட்டின் முர்கோப் ஆகிய இடங்களில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. இதில் பைசாபாத்தில் 6.7 ரிக்டர் அளவிலும், முர்கோப் பகுதியில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த பயங்கர நிலநடுக்கத்தினால் வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கியது. இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டுவெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர். அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் உயிரிழப்புகள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. கடந்த 8 நாட்களில் ஏற்பட்ட மூன்றாவது நிலநடுக்கம் இதுவாகும். மேலும் இந்த நிலநடுக்கத்தினால் பாதிப்புகள் எதுவும் இல்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது.