ஆப்கான் தலைநகர் காபுலில் வெளியுறவு அமைச்சுக் கட்டத்திற்கு வெளியில் கடந்த புதனன்று (11) இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தற்கொலைதாரி வெளியுறவு அமைச்சுக்குள் நுழைய முயன்றபோதும் அது தோல்வி அடைந்திருப்பதாக தலிபான்களால் நடத்தப்படும் தொடர்பாடல் அமைச்சின் அதிகாரியான உஸ்தாத் பரீதுன் தெரிவித்துள்ளார். எனினும் பொலிஸ் தரப்பில் ஐவரே இந்தத் தாக்குதலில் உயிரிழந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்லாமிய அரசுக் குழுவின் உள்ளுர் பிரிவு இந்தத் தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளது.
கடந்த ஆண்டு ஆட்சியை கைப்பற்றிய தலிபான்கள் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தியதாகக் கூறியபோதும் இஸ்லாமிய அரசு குழு உரிமை கோரும் பல குண்டு வெடிப்புகள் மற்றும் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.