ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்திலுள்ள 2 ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்தில் 19 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
குண்டூரில் இருந்து புறப்பட்டு ராயகடா நோக்கி சென்று கொண்டு இருந்த விரைவு ரயில் மீது விசாகப்பட்டினத்தில் இருந்து பலாசா நோக்கி சென்ற பயணிகள் ரயில் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில், ரயில்களின் பெட்டிகள் மற்றும் தண்டவாளங்கள் உருக்குலைந்துள்ளது.மேலும் 19 பேர் வரை உயிரிழந்து இருப்பதாகவும், பலர் படுகாயமடைந்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆந்திராவில் ஏற்பட்டுள்ள இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.அத்துடன் இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தற்போது ஆந்திரா மாநிலத்தில் 2 ரயில்கள் மோதிக் கொண்டுள்ளன. இரண்டு விபத்துகளிலும் சிக்னல் கோளாறு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.