தென்னேகும்புர – ராகல வீதியில் நேற்று (3) ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று காருடன் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காரின் சாரதி படுகாயமடைந்த நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் மைலப்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 47 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
காரில் பயணித்த ஐந்து பேரும், பேருந்தில் பயணித்த ஐந்து பேரும் சிறு காயங்களுடன் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.