test
செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை

Published on

spot_img
spot_img

வடமேல் மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய துரித நடவடிக்கையை எடுப்பதாக வடமேல் மாகாண ஆளுநர் ஹாபிஸ் நசீர் அஹ்மட் தெரிவித்தார்.

வடமேல் மாகாண புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட நசீர் அஹ்மட், மல்வத்து பிரிவு அனுநாயக்க விக்ரமாராச்சி ஆயுர்வேத பல்கலைக்கழக வேந்தர் அதி வண. நியங்கொட விஜிதசிறி அனுநாயக்க தேரர் மற்றும் அஸ்கிரிய மஹா விகார பிரிவு மஹாநாயக்க தேரர் வரகாஹொட ஞானரத்ன தேரர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது, இரண்டு பௌத்த மதத் தலைவர்களும் புதிய ஆளுநருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதுடன், வடமேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் உள்ளிட்டவை தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

வடமேல் மாகாணத்திற்கு புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட தங்களின் சிந்தனை போக்கின்படி, தேசிய ஒருமைப்பாட்டிற்கு உங்களால் சிறந்த பங்களிப்பை ஆற்ற முடியும் என்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும் எனவும் அவர்கள் இதன்போது தெரிவித்துள்ளனர்.

மேலும், வடமேல் மாகாணத்தில் தற்பொழுது நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்க திட்டமிட்டுள்ளதாக ஆளுநர் நசீர் அஹ்மட் இங்கு குறிப்பிட்டார்.

இதன்மூலம் குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளிலும் , பிரிவினாக்களிலும் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் இதற்கான பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் ஆளுநர் கூறினார்.

அத்துடன், வடமேல் மாகாணத்தின் சுற்றுலா வர்த்தகம் நூற்றுக்கு இரண்டு வீதமாக உள்ளதாகவும் , அதனை மேம்படுத்தி பல நடவடிக்கைகளை மேற்கொள்வது ஒரு விசேட வேலைத்திட்டமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

சுற்றுலாத்துறையின் அபிவிருத்தி ஊடாக பிரதேசத்தின் சுற்றுலா வர்த்தகத்தை முன்னேற்றி வடமேல் மாகாணத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Latest articles

சந்தேக நபரால் பொலிஸ் கான்ஸ்டபிள் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி

ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த நபரைக் கைது செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் சந்தேக நபரால் தாக்கப்பட்டு அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் உயிரிழப்பு…..

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர், ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் தூதுவரான Jean...

பிரபல இசையமைப்பாளர் காலமானார்….

இலங்கையின் பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான ஆனந்த பெரேரா காலமானார். கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 67...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி வருடம் வைகாசி மாதம் 14 ஆம் தேதி திங்கட்கிழமை 27.05.2024 இன்று மாலை 05.08 வரை சதுர்த்தி. பின்னர்...

More like this