ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்ற 2.50 லட்சம் பேரில் 20 ஆயிரத்திற்கும் குறைவான ஆசிரியர்களே தேர்ச்சி பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படுகிறது.
2022ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாள் நடத்தப்பட்டு அதில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன .அதன் தொடர்ச்சியாக ஆசிரியர் தகுதித்தேர்வின் இரண்டாம் தாள் கடந்த பிப்ரவரி 3 முதல் 15-ம் தேதி வரை கணினி வழியில் நடத்தப்பட்டது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை வகுப்பு எடுப்பதற்கான ஆசிரியர் பணியில் சேர்வதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு 2 ஆம் தாளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம்.
இந்த நிலையில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையான ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2-ன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.https://www.trb.tn.gov.in/ என்கிற இணையதள முகவரியில் தேர்வு முடிவுகளை அறியலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து இருந்தது.
இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு மொத்தம் விண்ணப்பித்த 4 லட்சம் பேரில் 2.54 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுதியது தெரியவந்துள்ளது. மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்ற 2.50 லட்சம் பேரில் 20 ஆயிரத்திற்கும் குறைவான ஆசிரியர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர்.