Homeஇலங்கைஆசிரியரின் கட்டளையை ஏற்க மறுத்ததால் மாணவர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் .

ஆசிரியரின் கட்டளையை ஏற்க மறுத்ததால் மாணவர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் .

Published on

ஆசிரியரின் கட்டளையை ஏற்க மறுத்ததால் மாணவர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.மாத்தளை நாவுல பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

பெற்றோர் முறைப்பாடு பாடசாலையிலிருந்து தனது வீட்டிற்கு இரு சமையல் எரிவாயு சிலிண்டர்களை சுமந்து வருமாறு ஆசிரியர் மாணவரிடம் பணித்துள்ளார்.

எனினும் மாணவர் ஆசிரியரின் கட்டளையை ஏற்க மறுப்பு தெரிவித்தமையால் ஆசிரியரால் மாணவர் தாக்கப்பட்டுள்ளார்.
10 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவர் ஒருவரே இவ்வாறு ஆசிரியரால் தாக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்குள்ளான நிலையில் குறித்த மாணவன் அம்பான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தம்புள்ளை வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார்.

வேறு எவ்வித கோபமும் இல்லை இந்த நிலையில்,பெற்றோரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய ஆசிரியர் பொலிஸாரினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது குறித்த மாணவர் தனது கட்டளையை நிறைவேற்றாமையினால் ஏற்பட்ட கோபத்தில் தாக்கியதாக ஆசிரியர் ஒப்புக்கொண்டுள்ளதுடன், மாணவர் மீது வேறு எவ்வித கோபமும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest articles

இலங்கையில் இப்படியொரு திருடன்! வியப்பில் நாட்டு மக்கள்

இலங்கையில் திருடன் ஒருவனின் செயற்பாடு குறித்து நாட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் ரயிலில்...

தனியார் வகுப்பிற்கு சென்று திரும்பிய 14 வயது மாணவி துஸ்பிரயோகம் – இளைஞன் தலைமறைவு!

தனியார் வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 14 வயது சிறுமிக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை...

சர்ச்சையில் சிக்கிய யாழ்.மாநகரசபை ஆணையாளர்!

யாழ்.மாநகரசபை ஆணையாளர் பெண் உத்தியோகத்தர் ஒருவருடன் தொலைபேசியில் பேசியபோது பயன்படுத்திய வார்த்தை பிரயோகங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறலாம் என...

திருகோணமலையில் கஞ்சா செடிகளை வளர்த்த நபர் கைது!

கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபரொருவரை திருகோணமலை- நிலாவளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.திருகோணமலை- பாலையூற்று முருகன் கோயில்...

More like this