மித்தெனிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் பாடசாலையின் ஆசிரியரால் தாக்கப்பட்டு படுகாயமடைந்து வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்பும் தனது மகன் மீது பல முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவனின் தாய் தெரிவித்துள்ளார்.
காயமடைந்த மாணவர் தொடர்ந்தும் வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.