ஐக்கிய இராச்சியத்தின் துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று ஆரம்பமான 21ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் இலங்கையின் பெண்கள் அணித் தலைவி நெத்மிகா மதுஷானி ஹேரத் வெள்ளிப் பதக்கத்தை வென்று தேசத்திற்கு புகழீட்டிக்கொடுத்தார்.
துபாய் விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி இரவு 9.00 மணிக்கு ஆரம்பமான பெண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியிலேயே மதுஷானி ஹேரத் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
இம்முறை ஆகிய கனிஷ்ட மெய்வலலுநர் போட்டியில் இலங்கைக்கு கிடைத்த முதுலாவது பதக்கம் இதுவாகும்.
அவர் 13.01 மீட்டர் தூரம் பாய்ந்தே வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார். இது அவர் பதவி செய்து தனிப்பட்ட அதிசிறந்த தூரப் பெறுதியாகும்.
2014ஆம் ஆண்டு ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் விதுஷா லகஷானி முப்பாய்ச்சிலில் பதக்கம் வென்ற பின்னர் இலங்கைக்கு இதே நிகழ்ச்சியில் கிடைத்த 2ஆவது பதக்கம் இதுவாகும்.