அஹுங்கல்ல பிரதேசத்தில் இன்று (11) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இனந்தெரியாத ஆயுததாரிகள் குழுவினால் சுடப்பட்டதில் கொஸ்கொட, நாபே பகுதியைச் சேர்ந்த பாலய என அடையாளம் காணப்பட்ட நபர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டியில் பயணித்த நபரை காரில் வந்த ஆயுததாரிகள் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கழுத்து பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான அவர் தற்போது பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சந்தேக நபர்களை கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.