Homeஇலங்கைஅஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு மீளெடுப்பு தொடர்பில் விசேட உத்தரவு

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு மீளெடுப்பு தொடர்பில் விசேட உத்தரவு

Published on

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளுக்காக தவறான தகவல்களை வழங்கி பணத்தை பெற்றுக்கொள்பவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

முறைகேடான வகையில் பெற்றுக்கொண்ட நலன்புரி கொடுப்பனவுகள் அனைத்தும் மீள அறவிடப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.அஸ்வெசும நலன்புரித் திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அஸ்வெசும நலன்புரித்திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 15 இலட்சம் பயனாளர்களில் வங்கி வைப்பு உள்ளிட்ட சரியான தகவல்களை வழங்கிய 8 இலட்ச பயனாளர்களுக்கு கடந்த மாதத்துக்கான கொடுப்பனவுகளை வழங்க திறைச்சேரி 5 பில்லியன் ரூபாவை சகல அரச வங்கிகளுக்கும் விடுவித்துள்ளது.

அரச வங்கிகளின் பிரதானிகளுடன் விசேட பேச்சு வார்த்தையில் ஈடுபடவுள்ளோம். பயனாளர்கள் எவ்வித அசௌகரியங்களும் இல்லாமல் கொடுப்பனவுகளை வழங்குவதற்கான பிரத்தியேக வழிமுறைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தவுள்ளோம்.

தவறான தகவல்களை வழங்கி நலன்புரி கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்பவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதுவரை காலமும் முறைகேடான வகையில் பெற்றுக்கொண்ட கொடுப்பனவுகள் அனைத்தும் மீண்டும் அறவிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Latest articles

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...

உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதை:முதலமைச்சர் அறிவிப்பு

இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்....

More like this